UPDATED : ஆக 11, 2026 07:10 PM
ADDED : ஆக 11, 2026 07:02 PM

பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா தொடர்பாக, பார்லி.,யில் இரு நாட்கள் விவாதம் நடந்தது. காங்., - எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஆனால், அந்த இரு நாட்களுமே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லி., பக்கமே தலைகாட்டவில்லை. அவர் எங்கு ஓடி ஒளிந்தார்? கவுரவ் கோகோய் லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
அக்கறை இல்லை!
நாட்டின் இளைஞர்கள் மீது காங்கிரசுக்கும் அக்கறை இல்லை; பா.ஜ.,வுக்கும் அக்கறை இல்லை. இரு கட்சிகளும் அரசியல் சுயலாபத்துக்காக இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன. எனவே, இந்த கட்சிகளின் சூழ்ச்சி வலையில் இளைஞர்கள் சிக்கக்கூடாது. இந்த கட்சிகளிடம் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
யார் பொறுப்பு?
ஜார்க்கண்டில் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். இது ராகுலின் கண்களுக்கு தெரியவில்லையா? இது பற்றி அவர் எப்போது பேசுவார்? இந்த தடியடி ராகுலின் உத்தரவுப்படி நடந்ததா அல்லது மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவுறுத்தலின்படி நடந்ததா? சம்பித் பத்ரா லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
