ADDED : செப் 22, 2024 06:40 PM

கோவை: 'பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. ஹிந்து கோவில்களை அரசு நிர்வகிக்காமல், பக்தியுள்ள ஹிந்துக்கள் நடத்த வேண்டிய காலம் இது' என்று, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கோவில் பிரசாதத்தில் பக்தர்கள் மாட்டுக் கொழுப்பை உண்பது, அருவருப்பு என்பதை விடவும் கொடுமையானது. அரசு நிர்வாகம் செய்யாமல், பக்தர்களே கோவில்களை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது, இதனால் தான்.
பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. ஹிந்து கோவில்களை, அரசு நிர்வகிக்காமல், பக்தியுள்ள ஹிந்துக்கள் நடத்த வேண்டிய காலம் இது.இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.