sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'இண்டி' கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

/

'இண்டி' கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

'இண்டி' கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

'இண்டி' கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

95


UPDATED : ஆக 19, 2025 01:13 PM

ADDED : ஆக 18, 2025 11:58 PM

Google News

95

UPDATED : ஆக 19, 2025 01:13 PM ADDED : ஆக 18, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இண்டி கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆந்திராவை சேர்ந்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கு, வரும் 21ம் தேதியுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மஹாராஷ்டிரா கவர்னராக உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

மறைந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அனைவரும், கட்சி பேதமின்றி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

இதனால், தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ், தமிழர் என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்யும் கட்சி என்பதால், தமிழரான சி.பி.ராதா கிருஷ்ணனை எதிர்ப்பதா, ஆதரிப்பதா, ஓட்டளிக்காமல் நடுநிலை வகுப்பதா என்ற குழப்பத்தில் தி.மு.க., இருப்பதாக தெரிகிறது.

இன்னும் ஏழு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், தி.மு.க.,வுக்கு இந்த விஷயத்தில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரையே துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த, தி.மு.க., அங்கம் வகிக்கும், 'இண்டி' கூட்டணி தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியானது.

அதற்கேற்ற வகையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்வதற்காக, இண்டி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நேற்றிரவு நீண்ட நேரம் நடந்தது.

அப்போது, ராஜ்யசபா தி.மு.க., குழு தலைவரான சிவா அல்லது 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகிய இருவரில் ஒருவரை நிறுத்த, பலரும் விருப்பம் தெரிவித்தனர். எனினும் இறுதியான முடிவு எட்டப்படவில்லை. வெவ்வேறு கூட்டணி கட்சிகளும் ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவித்ததால் இழுபறி ஏற்பட்டது.

இது தொடர்பாக டில்லியில் நேற்று பேட்டி அளித்த சிவா, ''துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, இண்டி கூட்டணி தலைவர்கள் தான் முடிவு செய்வர். நான் எதுவும் கூற முடியாது,'' என்றார்.

இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு, அனைத்து கட்சித் தலைவர்களிடமும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். முதல்வர் ஸ்டாலினுடனும் அவர் பேசியுள்ளார். இதனால், இண்டி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, 'இண்டி கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுபவர் வெற்றி பெற வாய்ப்பில்லை. அதனால், முக்கிய தலைவர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. 'துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்திவிட்டு, அதோடு அரசியலில் இருந்து ஓரங்கட்டி விடுவர் என்ற அச்சமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்.

அறிவிப்பு

இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்தார். இவர் இண்டி கூட்டணி வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் அவர் அறிவித்தார்.

கோவா மாநிலத்தின் முதல் லோக் ஆயுக்தா தலைவராகவும், குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்த சுதர்சன் ரெட்டி, உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். அவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டது கிடையாது. இப்போது தான் முதல் முறையாக போட்டியிடுகிறார். இவர் 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று கார்கே இன்று அறிவித்தார்.






      Dinamalar
      Follow us