தெரு நாய்களை கொன்றது யார்? தகவல் தந்தால் ரூ.50,000 பரிசு
தெரு நாய்களை கொன்றது யார்? தகவல் தந்தால் ரூ.50,000 பரிசு
ADDED : டிச 14, 2024 01:49 AM
புதுடில்லி:'வடகிழக்கு டில்லியில் இரண்டு தெருநாய்களைக் குத்திக் கொலை செய்தவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்' என விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா இந்தியா' அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பீட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுனயனா பாசு கூறியதாவது:
வடகிழக்கு டில்லி கபீர் நகரில் நேற்று முன் தினம், இரண்டு தெருநாய்களை சிலர் கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளனர். அதில் ஒரு நாய் அதே இடத்தில் இறந்தது. பலத்த காயம் அடைந்த நிலையில் மற்றொறு நாய் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.
நாய்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து, வெல்கம் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசின் விசாரணைக்கு உதவும் வகையில் தெருநாய்களை குத்திக் கொலை செய்தவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு பீட்டா அமைப்பு 50,000 ரூபாய் பரிசு வழங்கும்.
விலங்குகளுக்கு எதிரான கொடுமை குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும். விலங்குகளை தாக்குவோருக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

