காங்.,கில் இருந்து யார் விலகுவர்? ஜெகதீஷ் ஷெட்டர் பதில்
காங்.,கில் இருந்து யார் விலகுவர்? ஜெகதீஷ் ஷெட்டர் பதில்
ADDED : பிப் 15, 2024 05:20 AM

சாம்ராஜ்நகர் : ''காங்கிரசில் இருந்து யார் எல்லாம் விலகுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,'' என்று, பா.ஜ., ஜெகதீஷ் ஷெட்டர் கூறி உள்ளார்.
சாம்ராஜ்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் எந்த தொகுதி மீதும் நான் கண் வைக்கவில்லை.
'சீட்' கேட்கவும் மாட்டேன். கட்சி மேலிடம் கூறினால், தேர்தலில் போட்டியிடுவேன். இல்லா விட்டால் ஒரு தொண்டனாக தொடருவேன்.
காங்கிரசில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தேன். என் ஆதரவாளர்களும் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வுக்கு வருவர் என்று தான் கூறினேன்.
காங்கிரசில் இருந்து யாரையும் அழைத்து வருவதாக கூறவில்லை. ஆனாலும் காங்கிரசில் இருந்து சிலர் பா.ஜ.,வினர் இணைவர். அவர்கள் யார் என்று, பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எங்களுடன் கூட்டணியில் உள்ள, ம.ஜ.த.,வுக்கு எத்தனை 'சீட்' என்று, மேலிட தலைவர்கள் முடிவு செய்வர்.
ஹாசன் தொகுதி குறித்து, எங்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை ஒப்பிடுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான், விவசாயிகளுக்கு ஆதரவாக பல நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. விவசாயிகள் நலனுக்காக, மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

