
மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட பின், பிரதமர் மோடி 44 முறை வெளிநாடுகளுக்கும், 250 முறை நம் நாட்டிலும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால், மணிப்பூரில் ஒரு வினாடி கூட அவர் செலவிடவில்லை. மணிப்பூர் மக்கள் மீது ஏன் இந்த வெறுப்பு?
மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்
வேருடன் அழியுங்கள்!
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், காஷ்மீரிகள் அனைவருக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் வேருடன் அழிக்க வேண்டிய நேரம் இது. ஜம்மு - காஷ்மீர் என்றென்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததில்லை.
பரூக் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
பாகிஸ்தான் ஆதரவாளர்கள்!
காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நம் ராணுவம், 2019ல் எந்த இடத்தில் துல்லிய தாக்குதல் நடத்தியது என இதுவரை தெரியவில்லை என்று கூறியுள்ளார். இவரைப் போன்ற பாகிஸ்தான் ஆதரவாளர்கள், ஓட்டு வங்கிக்காக நம் நாட்டின் புகழை சீர்குலைக்கின்றனர்.
தருண் சுக், தேசிய செயலர், பா.ஜ.,

