ரயிலில் பாய்ந்து ஏட்டு தற்கொலை மனைவி, மாமனார் மீது புகார்
ரயிலில் பாய்ந்து ஏட்டு தற்கொலை மனைவி, மாமனார் மீது புகார்
ADDED : டிச 14, 2024 11:14 PM

பையப்பனஹள்ளி: 'மனைவி, மாமனாரின் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என மரண கடிதம் எழுதி வைத்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜயபுராவின் சிந்தகி தாலுகுா ஹண்டிகனுார் கிராமத்தின் திப்பண்ணா, 34. பெங்களூரு ஹுலிமாவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றினார்.
திப்பண்ணாவின் மனைவி பார்வதி, 20. இரண்டு ஆண்டுகளாக பரப்பன அக்ரஹாரா அருகே நாதநாதபுராவில் வசித்தனர். தம்பதிக்கு குழந்தை இல்லை.
கடந்த சில மாதங்களாக திப்பண்ணா, பார்வதி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு மனைவி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், பையப்பனஹள்ளி ரயில் நிலையம் அருகே பைக்கில் திப்பண்ணா, வந்தார். தண்டவாளத்தின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பைக் கவரில், அவர் எழுதிய மரண கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், 'என் மனைவி பார்வதி, மாமனார் யமுனப்பா ஆகியோரின் தொல்லையால் உயிர் இழக்கிறேன். 12ம் தேதி என்னிடம் போனில் பேசிய யமுனப்பா, 'உன்னால் தான் எனது மகள் வாழ்க்கையில் தொல்லை.
நீ செத்து விடு' என்று கூறி, என்னை ஆபாசமாக திட்டினார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில், பார்வதி, யமுனப்பா மீது, பையப்பனஹள்ளி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.