ADDED : பிப் 16, 2024 07:29 AM

சாம்ராஜ் நகர்: 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த மனைவியால், கணவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சாம்ராஜ் நகர் ஹனுார் பி.ஜி.பால்யா கிராமத்தில் வசித்தவர் குமார், 33. இவரது மனைவி ரூபா, 30. இவர் 'ரீல்ஸ்' வீடியோக்களை எடுத்து, சமூக வலை தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்து, குமாரின் நண்பர்கள் கேலி செய்து உள்ளனர். இதனால், “ரீல்ஸ் வீடியோ எடுக்க வேண்டாம்,” என, ரூபாவிடம், குமார் கூறி உள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை.
கணவன், மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனம் உடைந்த குமார் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
'குமாரின் மரணத்துக்கு ரூபா, அவரது உறவினர்கள் யசோதா, கோவிந்தா ஆகியோர் தான் காரணம்' என, ஹனுார் போலீசில் குமாரின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.