கன்னிமலை எஸ்டேட் பகுதியை கலங்கடித்த காட்டு யானைகள்
கன்னிமலை எஸ்டேட் பகுதியை கலங்கடித்த காட்டு யானைகள்
ADDED : செப் 22, 2024 02:03 AM

மூணாறு,:மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியை காட்டு யானைகள் கலங்கடித்தன.
மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியில் டாப் டிவிஷன் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்ட இரண்டு காட்டு யானைகள் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நடமாடின.
அதிகாலை 2:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள உதவி மேலாளர் பங்களாவின் வளாகத்தினுள் நுழைந்தன.
அங்கிருந்து நள்ளிரவு 3:45 மணிக்கு வெளியேறி மதியம் தேயிலை தோட்ட எண் 13ல் முகாமிட்டன.
அதே எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நடமாடிய ஒற்றை கொம்பன் ஆண் காட்டு யானை நேற்று காலை 8:00 மணிக்கு மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் உள்ள தேயிலை பாக்டரி அருகே வந்தது.
ரோட்டில் யானை நடமாடியதால் வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். அதன்பிறகு தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சென்று நேற்று மதியம் கடலார் எஸ்டேட்டுக்கு சென்றது.
இந்த காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.