UPDATED : அக் 30, 2024 11:54 AM
ADDED : அக் 30, 2024 02:29 AM

பெங்களூரு: பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி, கர்நாடகா ஐகோர்ட் உத்தரவிட்டது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. என்பவர், நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக வந்த புகாரில் ரேணுகாசாமி ஜூன் 09-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தர்ஷன் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
இந்நிலையில் நடிகர் தர்ஷன் ஜாமின் கோரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது இறுதி கட்ட விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் (அக்14ம் தேதி) நடந்த விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து பெங்களூரு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் தனக்கு கடுமையான முதுகுவலி இருப்பதால், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள இடைக்கால ஜாமின் உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், தர்ஷனுக்கு 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கினர்.
* எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
* ஒரு வாரத்திற்குள் தர்ஷன் சிகிச்சை பெறும் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.
* பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். சிகிச்சை தவிர வேறு விஷயங்களில் ஈடுபடக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.