'டிக் டாக்' மீதான தடை நீக்கம்? அமைச்சர் வைஷ்ணவ் விளக்கம்!
'டிக் டாக்' மீதான தடை நீக்கம்? அமைச்சர் வைஷ்ணவ் விளக்கம்!
ADDED : செப் 09, 2025 03:32 AM

புதுடில்லி : “டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை,” என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த, 'பைட் டான்ஸ்' என்ற நிறுவனத்தின், 'டிக் டாக்' செயலி, 'ரீல்ஸ்' எனப்படும் சிறிய வீடியோ எடுத்து பகிர பயன்படுகிறது.
தற்போது நம் நாட்டில், 'மெட்டா' குழுமத்தின், 'இன்ஸ்டாகிராம்' செயலி எந்தளவுக்கு பிரபலமோ, அதைவிட பல மடங்கு, 'டிக் டாக்' செயலி பிரபலமாக இருந்தது.
இதை நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர் பயன்படுத்தினர். தேசிய பாதுகாப்பு கருதி, 2020 ஜூனில், சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டது. அவற்றில், 'டிக் டாக்' செயலியும் அடங்கும். 2021 ஜனவரியில், இந்த தடை நிரந்தரமாக்கப்பட்டது.
இந்தியாவில் மீண்டும், 'டிக் டாக் ' செயலி செயல்பட உள்ளதாகவும், இதற்கான செயல்முறைகள் துவங்கி உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
மேலும், தற்போது சீனாவுடன் நட்புறவு ஏற்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி கூறுகையில், “டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை. அது தொடர்பாக எந்த பேச்சும் நடக்கவில்லை,” என்றார்.