இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய வாலிபர்; காதலர் தினத்தில் கொடூரம்
இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய வாலிபர்; காதலர் தினத்தில் கொடூரம்
ADDED : பிப் 14, 2025 12:57 PM

அன்னமய்யா: ஆந்திராவில் 23 வயது இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னமய்யா மாவட்டம் குர்ரம்கொண்டா பகுதியில் 23 வயது இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியும், பிறகு ஆசிட்டை முகத்தில் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் முகம், வாய், கழுத்து பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், இது குறித்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் மதனப்பள்ளியைச் சேர்ந்த கணேஷ் என்பது தெரிய வந்துள்ளனர். மேலும், வரும் ஏப்.,29ம் தேதி தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
எனவே, இருவரிடையே ஏதேனும் காதல் பிரச்னையாக இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.