ADDED : நவ 08, 2025 12:33 AM
புதுடில்லி: தீப்பிடித்து எரிந்த காரில் இருந்து, ஒரு பெண்ணும் அவரது ஐந்து வயது குழந்தையும் மீட்கப்பட்டனர்.
கல்காஜி விரிவாக்கத்தில் வசிப்பவர் 38 வயது பெண், தன் ஐந்து வயது குழந்தையுடன் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்றார். தென்கிழக்கு டில்லி கோவிந்த்புரி தாரா அபார்ட்மென்ட் சிக்னலில், காத்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரில் திடீரென தீப்பிடித்தது.
விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்து இருவரையும் மீட்டனர். தீயை அணைக்க டில்லி ஜல் போர்டு தண்ணீர் டேங்கரை அனுப்பி வைத்து, ஏற்பாடு செய்தது.
தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிய போலீசுக்கு, அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கிடங்கு வடமேற்கு டில்லி திக்ரி காலன், பி.வி.சி., மார்க்கெட்டில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில், நேற்று முன் தினம் நள்ளிரவு தீப்பற்றியது. தகவல் அறிந்து, 10 வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர், ஐந்து மணி நேரம் போராடி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிடங்கில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து கருகின. நள்ளிரவில் தீப்பற்றியதால் அந்த நேரத்தில் கிடங்கில் ஊழியர்கள் யாரும் இல்லை.
கவுதம்புரி வடகிழக்கு டில்லி கவுதம்புரியில் நேற்று மதியம் 2:00 மணிக்கு ஒரு கடையில் தீப்பற்றியது. ஐந்து வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர், மாலை 3:20 மணிக்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெம்போ வேன் கிழக்கு டில்லி காந்தி நகரில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, ஒரு டெம்போ வேனில் தீப்பிடித்தது. இரண்டு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்துக்குள் தீயை அணைத்தனர். ஆனால், வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

