ADDED : நவ 08, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தாய்லாந்தில் இருந்து, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்தவர், புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பூகெட் நகரில் இருந்து புதுடில்லி வந்த விமானத்தில் வந்த பயணியரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஒரு பயணியின் டிராலி சூட்கேஸில் இருந்த 10,357 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனர். அந்தப் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு, 10 கோடி ரூபாய் என சுங்க அதிகாரிகள் கூறினர்.

