ADDED : பிப் 17, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம்நகர் : விடுப்பில் இருந்த நிலையில், பெண் போலீஸ் ஏட்டு துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ராம்நகர் ஹரோஹள்ளி தியாவசந்திரா கிராமத்தின் மஞ்சுஸ்ரீ, 27. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெங்களூரு மைக்கோ லே - அவுட் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிவாஜி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். 10 நாட்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவு என்று கூறி, விடுப்பில் சென்றார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியவில்லை. பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.