ADDED : அக் 27, 2025 01:11 AM
ஹத்ராஸ்: உத்தர பிரதேசத்தில், கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பலருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்தார்.
உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தரா ராவ் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், 23ம் தேதி சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு, கடையில் வாங்கி வைத்திருந்த இனிப்புகளை பிரசாதமாக வழங்கினர்.
அதை சாப்பிட்ட சில நிமிடங்களில், 15 பேருக்கு வாந்தி, வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி முன்னிதேவி, 55, என்ற பெண் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதையடுத்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆக்ரா மற்றும் சிக்கந்தரா ராவ் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், மீதமுள்ள பிரசாதங்களைக் கைப்பற்றி பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பினர். விசாரணை நடக்கிறது.

