ADDED : ஜன 31, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முண்டூர் வேலிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிலிப் என்பவரது மனைவி சாராம்மா, 63. இந்நிலையில், இவர்கள் திருச்சூரில் உள்ள உறவினர்களை சந்தித்து விட்டு, வீடு திரும்பினர். நேற்று காலை, 11:00 மணிக்கு, கொச்சி - -கோவை தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்தனர்.
அப்போது, குழல்மன்னம் வேலிப்பாறை அருகே, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில், சாராம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பிலிப், மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். குழல்மன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.