ADDED : ஜன 30, 2025 07:09 AM
ராய்ச்சூர்; ஜாலஹள்ளி கிராமத்தில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக இறந்ததால், அவரது உறவினர்கள் பெண்ணின் மீது சந்தேகித்து, மரத்தில் கட்டி வைத்து தாக்கினர்.
ராய்ச்சூர், தேவதுர்காவின், ஜாலஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ரங்கப்பா, 45. இவர், இதே கிராமத்தை சேர்ந்த தண்டம்மா, 38, உடன் நெருக்கமாக பழகி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, ரங்கப்பாவுக்கு வலிப்பு ஏற்பட்டு, கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவர் இறந்த போது, தண்டம்மாவுடன் இருந்ததால், அவர் தான் ஏதோ செய்து விட்டார் என, சந்தேகித்த ரங்கப்பாவின் உறவினர்கள், தண்டம்மாவை மரத்தில் கட்டி வைத்து, மனம் போனபடி தாக்கினர். சம்பவ இடத்தில் நுாற்றுக்கணக்கானோர் இருந்தும், யாரும் தடுக்க முன் வரவில்லை
தகவலறிந்த ஜாலஹள்ளி போலீசார், அங்கு வந்து கூட்டத்தை கலைத்து, தண்டம்மாவை காப்பாற்றினர். தாக்குதல் நடத்திய ரங்கப்பாவின் உறவினர்கள் பசவராஜ் நாயக், யங்கம்மா, துர்கம்மா, ரேணுகா உட்பட பலர் தப்பி ஓடிவிட்டனர். வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
பெண்ணை தாக்கிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவிய பின், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

