மல்யுத்த கூட்டமைப்பில் பெண்கள் பங்கு அதிகரிக்க வேண்டும்: சாக்ஷி மாலிக் விருப்பம்
மல்யுத்த கூட்டமைப்பில் பெண்கள் பங்கு அதிகரிக்க வேண்டும்: சாக்ஷி மாலிக் விருப்பம்
UPDATED : ஜன 03, 2024 03:28 PM
ADDED : ஜன 03, 2024 03:04 PM

புதுடில்லி: மல்யுத்த கூட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: பெண்கள் பங்களிப்பு அதிகரிப்பது இளம் மல்யுத்த வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மல்யுத்த கூட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். ஓராண்டாக நான் மனது மற்றும் உடலளவில் சோர்வாக இருந்ததால் கூட்டமைப்பில் சேர்வது பற்றி நினைக்கவில்லை.
சஞ்சய் சிங்குடன் மட்டுமே எங்களுக்கு பிரச்னை இருந்தது. புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிக குழுவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சஞ்சய் சிங்கிற்கு மல்யுத்த சம்மேளனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரிஜ் பூஷன் என் குடும்பத்தை குறிவைக்கிறார். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.