தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வெளிநாட்டு அழுத்தத்துக்கு பணிய மாட்டோம்: மத்திய அரசு திட்டவட்டம்

வெளிநாட்டு அழுத்தத்துக்கு பணிய மாட்டோம்: மத்திய அரசு திட்டவட்டம்

வெளிநாட்டு அழுத்தத்துக்கு பணிய மாட்டோம்: மத்திய அரசு திட்டவட்டம்


UPDATED : செப் 19, 2026 09:51 PM

ADDED : செப் 19, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 09:51 PM ADDED : செப் 19, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டு மக்களின் நலனே எங்கள் அரசின் முன்னுரிமை; வெளிநாட்டு அழுத்தத்துக்கு பணிய மாட்டோம் என தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான அதிரடி பொருளாதாரத் தடை மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், இந்தியா, சீனா மீது, 100 சதவீத வரி விதிக்க முடியும்.இந்த விவகாரம் குறித்து நம் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியதாவது:

நாட்டு மக்களின் நலனே எங்கள் அரசின் முன்னுரிமை. மக்களுக்கு பயனளிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இந்தியாவின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றுகிறது. மற்ற நாடுகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில்லை. நாட்டின் நலன்களுக்கு ஏற்பவே முடிவுகளை எடுக்கிறோம்.

எங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் நியாயமற்றவை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். எந்த நாட்டின் அழுத்தத்துக்கும் நாங்கள் பணிய மாட்டோம்.மக்களுக்கு தேவையான கச்சா எண்ணெய்யை சாதகமான விலையில் கிடைத்தால் எந்த நாட்டிலிருந்தும் வாங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us