தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விநாயகர் சதுர்த்தி விழா: கலாசார நிகழ்ச்சி

விநாயகர் சதுர்த்தி விழா: கலாசார நிகழ்ச்சி

விநாயகர் சதுர்த்தி விழா: கலாசார நிகழ்ச்சி


UPDATED : செப் 19, 2026 10:30 PM

ADDED : செப் 19, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 10:30 PM ADDED : செப் 19, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம் அவ்வை திடலில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று பரதநாட்டியம் மற்றும் யோகாசன கலாசார நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 42ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, சாரம் அவ்வை திடலில் நடந்து வருகிறது. 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

நேற்று மாலை 6 மணிக்கு மகா கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. ஐயப்பா சேவா சங்க பொருளாளர் ரத்தின ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். பா.ஜ., பொது செயலாளர் லட்சுமிநாராயணன் வரவேற்றார். பாஸ்கர பிரகலநாதன் வாழ்த்தி பேசினார்.

சிவசுப்ரமணியம் கோவில் தலைவர் செல்வகணபதி, சேவாபாரதி ஒருங்கிணைப்பாளர் சித்தார்த், பா.ஜ., துணைத் தலைவர் அகிலன், விழா பேரவை கணேசன், மணிவண்ணன், இந்து வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் மணி வீரப்பன், விழாப்பேரவை சீனிவாசன், கமல், குமார், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், சுகுதன், சந்திரமோகன், இந்து வழக்கறிஞர் முன்னணி கோவிந்ததிருநாவுக்கரசு, சீனிவாசபெருமாள், திலிப், குட்டிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, ஆனந்தபாலயோகி பவனானி, தேவசேனா பவனானி குழுவினரின், பரதநாட்டியம் மற்றும் யோகாசன கலாசார நிகழ்ச்சி நடந்தது. விழாப்பேரவை ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

முன்னதாக நேற்று காலை இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பாரதி சேவாலயம் அறக்கட்டளை சார்பில, ரத்த தான முகாம், ஓவியப்போட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தாமோதர் துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us