UPDATED : பிப் 13, 2025 02:30 PM
ADDED : பிப் 13, 2025 01:26 PM

பெங்களூரூ: வீட்டில் இருந்து வேலை பார்க்க சொன்னால் தற்போது வொர்க் பிரம் கார் என்ற லெவலுக்கு போய் விட்டது.
கோவிட் காலத்தில் பெரிதும் உதவியது வீட்டிலிருந்தே பணி செய்யும் 'வொர்க் பிரம் ஹோம்' கான்செப்ட். இது இன்னும் சில நிறுவனங்களில் நீடிக்கத்தான் செய்கிறது. நிரந்தரமாகவே பலருக்கு வீட்டில் இருந்தபடி பணிகள் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்து உள்ளது.
எங்கு சென்றாலும் ஒரு லேப்டாப் இருந்தால் அனைத்து பணிகளும் ஜரூராக நடக்கிறது. ரயில், பஸ், விமானம் என பலரும் பணிகளை ஆங்காங்கே பார்ப்பதை காண முடிகிறது. இந்நிலையில் பெங்களூருவில் ஆர்த்நகரில் ஒரு பெண், காரில் இருந்து பணி செய்தது (வொர்க் பிரம் கார்) சமூக வலைதளங்களில் பரவியது.
வீடியோவை ஆய்வு செய்த போக்குவரத்து போலீசார் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் பணி செய்த பெண்ணை கண்டுபிடித்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.