ADDED : செப் 28, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கோல் மார்க்கெட் ஜே.ஜே. குடிசைப் பகுதியில் அனைத்து குடிசை களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, 'ஹர் கர் ஜல் யோஜ்னா' திட்டத்தை புதுடில்லி முனிசிபல் கவுன்சில் துவங்கி உள்ளது.
மொத்தம், 7.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா துவக்கி வைத்து பேசுகையில், “சுத்தமான குடிநீர் ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் முடிக்கப்படும். இந்த திட்டத்தால், கலிபாடி மார்க்கில் மட்டும் 460 குடும்பங்கள் பயன் அடையும்,”என்றார்.