வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / இரண்டாம் உலகப்பேர் பாணியில் மீட்புப்பணி / இரண்டாம் உலகப்பேர் பாணியில் மீட்புப்பணி
/
செய்திகள்
இரண்டாம் உலகப்பேர் பாணியில் மீட்புப்பணி
2
ADDED : ஆக 01, 2024 02:08 AM
இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் சிக்கலான இடங்களை கடந்து வாகனங்கள், டாங்கிகள் செல்ல, 'பெய்லி' பால அமைப்பு பயன்படுத்தப்பட்டது. இந்த பால அமைப்பை வடிவமைத்து தந்தவர் டொனால்ட் பெய்லி. அதனால் அவர் பெயரில் இந்த பாலங்கள் அழைக்கப்படுகின்றன.நிலச்சரிவால் பிற பகுதிகளிடம் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியில், ராணுவத்தினர் இந்த பெய்லி பாலத்தை தற்போது கட்டி வருகின்றனர். சூரல்மலையில் ஆற்றின் குறுக்கே 24 டன் எடை உடைய பாலம், அரை கி.மீ., நீளத்துக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்கு தேவையான இரும்பு தளவாடங்கள் டில்லி மற்றும் பெங்களூருவில் இருந்து கண்ணுார் விமான நிலையத்திற்கு விமானம் வாயிலாக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து லாரிகளில் வயநாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பெய்லி பாலம் அமைக்கும் பணி இன்று மாலையுடன் முடியும் என, ராணுவத்தினர் தெரிவித்தனர். அதன்பின், இந்த பாலத்தின் வழியே மீட்புப்பணிக்கு தேவையான கனரக வாகனங்கள் செல்லும்.