ADDED : ஆக 18, 2025 01:06 AM

நம் நாட்டில் நிலவும் தற்போதைய சூழல், 'எமர்ஜென்சி' எனப்படும் அவசர நிலையைவிட மோசமானது. ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஒவ்வொரு வாக்காளருக்கும், நம் அரசியலமைப்பு சட்டம் ஓட்டளிக்கும் உரிமையை அளித்துள்ளது . ஆனால், இந்த ஓட்டுரிமையை பறிக்கும் செயலில் பா.ஜ., கூட்டணி ஈடுபட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
சித்தாந்த சமன்பாடு!
நாங்கள் ஒரே ஒரு சமன்பாட்டை மட்டுமே நம்புகிறோம்; அது, சித்தாந்த அடிப்படையிலான சமன்பாடு. இந்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சித்தாந்தத்தின் அடிப் படையில் பா.ஜ.,வுடன் இல்லை. காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோரின் சித்தாந்தத்தில் நம்பிக்கை உடைய ஹிந்துக்கள், முஸ்லிம்களுடன் சமூக- அரசியல் கூட்டணியை உருவாக்குவோம்.
பிரசாந்த் கிஷோர் நிறுவனர், ஜன் ஸ்வராஜ்
ஒப்புக்கொண்ட ஆணையம்!
ஓட்டு திருட்டு புகாரை, முதன்முறையாக தேர்தல் கமிஷன் ஒப்புக்கொண்டுள்ளது. ஓட்டுகள் திருடப்பட்டால், வாக்காளர்கள் எப்படி ஓட்டளிக்க முடியும்? இந்த விவகாரத்தில், பழங்குடியினர், தலித் என சமூகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, நம் நாட்டு மக்களை ஓட்டு திருட்டில் இருந்து பாதுகாப்பது அவசியம்.
பவன் கெரா செய்தித் தொடர்பாளர், காங்.,

