கட்டுக்குள் வந்தது யமுனை வெள்ளம்... இயல்பு நிலை திரும்புகிறது
கட்டுக்குள் வந்தது யமுனை வெள்ளம்... இயல்பு நிலை திரும்புகிறது
ADDED : செப் 08, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி யமு னை நதியில் நீர்மட்டம் அபாய அளவான 206 மீட்டரை தாண்டி 207 மீட்டரையும் கடந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரையோரப் பகுதிகளில் இருந்த வீடுகள் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கின.
நேற் று முன்தினம் முதல் நதியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை 8:00 மணிக்கு 205.56 மீட்டராக குறைந்தது. இதனால், கரையோரப் பகுதிகளில் புகுந்த வெள்ளமும் குறையத் துவங்கியுள்ளது. யமுனை நீர்மட்டம் எச்சரிக்கை அளவான 204.33 மீட்டருக்கும் குறைந்து வெள்ளம் விரைவில் வடியும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.