ஏப்.5 வரை கொட்டப்போகுது மழை கேரளாவுக்கு ' எல்லோ அலர்ட்'
ஏப்.5 வரை கொட்டப்போகுது மழை கேரளாவுக்கு ' எல்லோ அலர்ட்'
ADDED : ஏப் 03, 2025 02:34 AM
மூணாறு:கேரளாவில் ஏப்.5 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது.
கேரளாவில் தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் அதிகரித்தது. அதனால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வரும் நிலையில் மாநிலத்தில் ஏப்.5 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது. அதனால் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இன்று (ஏப்.3) இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், நாளை (ஏப்.4) பாலக்காடு, மலப்புரம், வயநாடு, ஏப்.5ல் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.
இம்மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் 64.5 முதல் 115.5 மி. மீ., வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.