புதிய வருமான வரி மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம் நாடு முழுதும் 60 ஆண்டுகளுக்கு மேல் இருந்த வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக புதிய திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இம்மசோதா ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
இரண்டு மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்றம் சுரங்கம் மற்றும் கனிம வளத்தை மேம்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட சுரங்கம் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதேபோல் துறைமுகங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் வகையில், இந்திய துறைமுகங்கள் சட்ட மசோதாவும் நேற்று நிறைவேற்றப்பட்டன.
காப்பீட்டு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு ராஜ்யசபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:
காப்பீட்டு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அமல்படுத்துவதன் வாயிலாக இத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்ய முடியும். இதற்கு முன் இந்திய காப்பீட்டு நிறுவனங்களால் 74 சதவீதம் மட்டுமே அன்னிய நேரடி முதலீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. காப்பீட்டு துறையில் நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக சேவைகளை எளிதாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

