ADDED : ஆக 12, 2025 03:39 AM
திருவனந்தபுரம்: மதம் மாற வற்புறுத்தி காதலியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோதமங்கலத்தை சேர்ந்த எல்தோஸ் மகள் சோனா 22. எர்ணாகுளத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரியில் உடன்படிக்கும் பரவூர் பகுதியைச் சேர்ந்த முகமது ரமீஸ் என்பவரை காதலித்தார். திருமணம் செய்த தீர்மானித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் சோனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
போலீசார் விசாரணையில் சோனா எழுதிவைத்த கடிதம் கிடைத்தது. அதில் முகம்மது ரமீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மதம் மாறுமாறு கூறி தங்கள் வீட்டில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும், மதம் மாறாவிட்டால் கொலை செய்வோம் என்று மிரட்டியதாகவும் அதனால் பயந்து தற்கொலை செய்ய தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.