சிவகுமார சுவாமி சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது
சிவகுமார சுவாமி சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது
ADDED : டிச 06, 2024 06:42 AM

கிரிநகர்: 'நடமாடும் கடவுள்' என்று மக்களால் அழைக்கப்படும், சிவகுமார சுவாமிகள் சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
துமகூரில் உள்ள சித்த கங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவகுமார சுவாமிகள். இவரை நடமாடும் கடவுள் என்றே மக்கள் அழைத்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
பெங்களூரு கிரிநகர் அருகே வீரபத்ரா நகர் பஸ் நிறுத்தம் பகுதியில், சிவகுமார சுவாமி சிலை உள்ளது.
கடந்த 30ம் தேதி இரவு, சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
இது குறித்து, கிரிநகர் போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சிலையை சேதப்படுத்திய ராஜ் சிவா, 27 என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து மதத்தில் இருந்து, கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். ஹிந்து தெய்வங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இயேசு கனவில் வந்து கூறியதால், சிவகுமார சுவாமிகள் சிலையை உடைத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விசாரணை நடக்கிறது.