ADDED : பிப் 14, 2024 10:00 PM
புதுடில்லி:மத்திய டில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனையில், டாக்டர் போல வேடமிட்டு நடமாடிய இளைஞர், கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி புராரி பகுதியில் வசிப்பவர் அசுதோஷ் திரிபாதி, 24. புதுடில்லி ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், நேற்று முன் தினம் நடமாடிக் கொண்டிருந்தார். டாக்டர் போல கோட் மற்றும் ஸ்டெத்தஸ்கோப் அணிந்திருந்தார்.
அவரிடம் மற்ற டாக்டர் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ராகுல் தமிஜா, பொடுத்த புகாரின்படி வடக்கு அவென்யூ போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசிடம் அசுதோஷ் திரிபாதி அளித்த வாக்குமூலத்தில், ''கடந்த ஆண்டு 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால், தேர்ச்சி அடையவில்லை. எனவே, டாக்டர் போல வேடம் அணிந்து மருத்துவமனைக்குள் நடமாடினேன்,'' எனக் கூறினார்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், அசுதோஷ் திரிபாதியை கைது செய்தனர்.

