ADDED : பிப் 12, 2025 10:56 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, லாரி மோதி, ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எழக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - -ராதிகா தம்பதியரின் மகன் அபிஜித், 20. மலம்புழா தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நண்பர் ஜிதினுடன், கோழிக்கோடு - -பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றார். அப்போது, மச்சாம்தோடு என்ற பகுதியில், பின்னால் வந்த லாரி ஸ்கூட்டரில் மோதியது. இதில், லாரியின் டயரில் சிக்கி, அபிஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஜிதின்சிறு காயங்களுடன் தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார், அபிஜித்தின் உடலை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, மன்னார்க்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.