ஆவணம் கேட்டு தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் சரக்கு வேனுக்கு தீ வைத்து வாலிபர் ஆவேசம்
ஆவணம் கேட்டு தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் சரக்கு வேனுக்கு தீ வைத்து வாலிபர் ஆவேசம்
UPDATED : நவ 12, 2026 03:24 PM
ADDED : நவ 12, 2026 03:22 PM

புதுடில்லி: டில்லியில், ஆவணங்களை சரிபார்ப்பதற்கு அடுத்தடுத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த ஒருவர், தன் சரக்கு வாகனத்தை சாலையிலேயே தீ வைத்து எரித்தார். இச்சம்பவத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிழக்கு டில்லியில் உள்ள காஜிபூர் எல்லைக்கு அருகில் பல்வேறு வாகனங்களை போலீசார் ஆய்வு செய்து அனுப்பினர். அப்போது, சரக்கு வாகனம் ஒன்றையும் தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டனர். தொடர்ந்து பல இடங்களில் ஆவணங்களை கேட்டு, வாகனத்தை நிறுத்துவதாக, சரக்கு வாகனத்திற்குள் இருந்த நபர் சத்தம் போட்டார். பின்னர் வெளியே வந்த அந்த நபர், தன் சரக்கு வாகனத்திற்கு ஆத்திரத்தில் தீ வைத்து எதிர்த்தார். அப்போது அவர் கையில் ஒரு வாள் வைத்திருந்தார். கருப்பு கொடியை பிடித்தபடி, வாளை உயர்த்தி பிடித்து ஆவேசமாக சத்தம் போட்டார்.
அந்த நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஜிபூர், முர்கா மண்டி சுங்கவரி சாவடிக்க அருகில் வாகனம் ஒன்று தீ பிடித்து எரிவதாக, காஜிபூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. னாஉடடியாக மேற்கு வினோத் நகர் பணிமணகை்கு அருகில் உள்ள சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு ஒரு டெம்போ வாகனம் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது. வாகனத்திற்குள் பொருட்கள் எதுவும் இல்லை.
இந்த சம்பவத்தின் போது, சரக்கு வாகனத்தின் உரிமையாளர் சுனேந்தர், 28 என்பவர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார். உடனடியாக அவரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். அதன் பின், போக்குவரத்து சீரானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசம்பவம் குறித்து, காஜிப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
