202 கி.மீ., அதிவேகத்தில் பயணம் விபத்தில் சிக்கி நொடியில் மரணம்
202 கி.மீ., அதிவேகத்தில் பயணம் விபத்தில் சிக்கி நொடியில் மரணம்
UPDATED : நவ 12, 2026 03:24 PM
ADDED : நவ 12, 2026 03:22 PM
புதுடில்லி: பீகாரை சேர்ந்தவர் அபிநவ் சிங், 22 என்பவர், குருகிராமில் வசித்து வந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் இவர் பணியாற்றினார். விடுமுறையில், பஞ்சாபின் லுாதியானாவிற்கு சென்ற அபிநவ் சிங், அங்கிருந்து, காரில் குருகிராம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் 202 கி.மீ., வேகத்தில் காரை செலுத்தினார்.
கார் ஓட்டியபடி, ஸ்னாப்சாட் சமூகவலைதளபக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டார். காரின் வேகம், மணிக்கு 202 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருந்ததை அந்த வீடியோவில் பதிவு செய்தார்.
அப்போது, அவரை காரை மெதுவாக செலுத்தும்படியும், கவனமாக ஓட்டும்படியும் பலரும் அறிவுரை கூறினர்.
ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், காரை அதிவேகத்தில் அவர் இயக்கினார். தென்மேற்கு டில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் கார் திடீரென்று கட்டுப்பாடு இழந்து சுவரில் மோதியது. அதே வேத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணியாளர்கள், காரில் இருந்து இருந்து அபிநவ் சிங்கை மீட்டு, துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வசந்த் குஞ்ச் தெற்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் நடத்தி விசாரணையின் போது, ‘சிசிடிவி’ கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அதிவேகத்தில் வந்த கார், சுவர் மீது மோதி, சாலையின் மறுபக்கத்திற்கு தாவி சென்று தீப்பிடித்த எரிந்த காட்சி பதிவாகி உள்ளது.
இது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
