UPDATED : அக் 08, 2026 06:16 PM
ADDED : அக் 08, 2026 05:16 PM
புதுடில்லி: வடகிழக்கு டில்லி, கராவல் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் மருமகனை குத்திக் கொன்ற மாமா கைது செய்யப்பட்டார்.
கராவல் நகர் பகுதியில் வசித்தவர், ஹிமான்சு பரத்வாஜ், 35. இவருக்கும், இவரது மாமாவுக்கும் நேற்று முன் தினம் நள்ளிரவில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. சண்டையை விலக்கிவிட, ஹிமான்சுவின் தம்பி முயற்சித்தார்.
அப்போது, கையில் கிடைத்த கத்தியால், ஹிமான்சுவை அவரின் மாமா சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த ஹிமான்சுவின் தம்பிக்கும் கத்திக்குத்து விழுந்தது.
காயமடைந்த இருவரும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ஹிமான்சு இறந்தார். அவரது தம்பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
