UPDATED : அக் 08, 2026 06:16 PM
ADDED : அக் 08, 2026 05:16 PM
புதுடில்லி: வாடகைக்கு எடுத்த ஆடி சொகுசு காரை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன், மூன்று வாகனங்கள் மீது மோதியதில், பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
கிஷன்கர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், ஆன்லைன் செயலியை பயன்படுத்தி, ஒரு நாள் இரவு வாடகையில், ‘ஆடி’ சொகுசு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். தன் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அந்த ஆடி காரை, சிறுவன் ஓட்டு சென்றுள்ளார். அப்போது கிஷன்கர் சிக்னல் அருகே உள்ள சி.என்.ஜி., எரிபொருள் நிலையத்திற்கு அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து மூன்று வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், உமாசங்கர், 45 என்ற பாதசாரி படுகாயமடைந்தார். அவர் உடனடியாக ஜே.பி.என்., அப்பெக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களையும் பரிமுதல் செய்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனை பிடித்த போலீசார், அவரை காணொலி வாயிலாக சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தினர்.
சிறுவனுக்கு, காரை வாடகைக்கு வழங்கிய நிறுவனத்திடமும் விசாரணை நடந்து வருகிறது.
