தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி


UPDATED : அக் 08, 2026 07:48 PM

ADDED : அக் 08, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:48 PM ADDED : அக் 08, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காட்டேரிகுப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.

பள்ளி முதல்வர் ஸ்டெல்லா மேரி தலைமை தாங்கினார். திருபுவனை அரசு உயர்நிலைப்பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் மாணவர்களின் 100-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்கள் ருக்குமணி, உதய பானு ஆகியோர் மாணவர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் கீதாஞ்சலி, மர்லின் போர்ஜியா, கலைவாணி, சுஜூ மலர், விஜயலட்சுமி, பைசூன்நாசியா, வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர் பாலச்சந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

லிங்காரெட்டிப்பாளையம் பாண்கோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் கோசலை தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சசிகலா வரவேற்றார். காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா மேரி கண்காட்சியைத் துவக்கி வைத்து பார்வையிட்டு, மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் தேர்வு செய்தார். கண்காட்சியில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us