தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காசநோய் இல்லாப் பஞ்சாயத்துகளுக்கு பாராட்டு :முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

காசநோய் இல்லாப் பஞ்சாயத்துகளுக்கு பாராட்டு :முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

காசநோய் இல்லாப் பஞ்சாயத்துகளுக்கு பாராட்டு :முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு


UPDATED : அக் 08, 2026 07:50 PM

ADDED : அக் 08, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:50 PM ADDED : அக் 08, 2026 05:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காச நோய் தடுப்பதற்கான ஜோஷ் தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி., மெய்நிகர் முறையில் பங்கேற்றனர்.

இந்தியாவை காசநோய் இல்லா நாடாக மாற்றும் நோக்கத்தின் கீழ், மத்திய அரசின் காசநோய் இல்லா பாரதம் திட்டத்தின் முக்கிய அங்கமாக இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஜோஷ் குழுக்களின் தேசிய அளவிலான முதற்கட்ட தொடக்க விழா புதுடில்லி பாரத் மண்டபத்தில் நடந்தது. இத்துடன் காசநோய் இல்லாப் பஞ்சாயத்துகளின் சாதனைகளைப் பாராட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நட்டா, மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, தசஞ்சய் சேத் மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் திட்டத்தைத் துவக்கிவைத்தனர்.

நேரடி மற்றும் மெய்நிகர் முறையில் நடைபெற்ற இத்தேசிய விழாவில், புதுச்சேரியில் இருந்து முதல்வர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி.,சுகாதாரத் துறை செயலாளர் குமார், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், துணை இயக்குநர் உமாசங்கர், மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ் மற்றும் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் மெய்நிகர் முறையில் பங்கேற்றனர்.

அரசின் முழுமையான நடவடிக்கைகளின் பயனாக, நாடு முழுவதும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 697 மாவட்டங்களைச் சேர்ந்த 67,933 கிராமங்கள் காசநோய் இல்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

காச நோயை ஒழிக்க ஜோஷ் குழுக்கள் அமைக்கப்பட்டு

காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், களப்பணிகளில் ஈடுபடுதல், ஆரம்பகால பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை பெற ஊக்கப்படுத்துதல் குறித்து உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதற்கான பிரத்யேக 'மொபைல் செயலி' ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் காசநோய் இல்லா புதுச்சேரி - காசநோய் இல்லா இந்தியா என்ற இலக்கை அடைய இது பெரிதும் உதவும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us