தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா

ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா

ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா


UPDATED : அக் 08, 2026 07:48 PM

ADDED : அக் 08, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:48 PM ADDED : அக் 08, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்-4 சார்பில் 9வது தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா நேற்று நடந்தது.

முத்தியால்பேட்டை, மஞ்சினி நகர் வரதவல்லி மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவிற்கு அங்கன்வாடி ஊழியர் லலிதா வரவேற்றார். திட்ட அதிகாரி நிர்மலா தேவி தலைமை தாங்கினார். ஊர் முக்கிய பிரமுகர்கள் தட்சணாமூர்த்தி, தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.

விழாவில், ஜிப்மர் மருத்துவனையை சேர்ந்த டாக்டர் ஜூனைதாபேகம் பங்கேற்று சமச்சீர் உணவுப் பழக்கம், சத்தான உணவுத் தேர்வு, நோய்களைத் தடுக்கும் உணவு முறைகள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.

விழாவில், மகளிர்கள் ஆரோக்கியமான, சத்துள்ள சிறுதானிய உணவு வகைகளை தயார் செய்து வந்து காட்சிப்படுத்தினர். தொடர்ந்து, உணவு தயாரித்து வந்திருந்த மகளிர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us