/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
கல்வியை அடிப்படை உரிமையாக்கும் மசோதா
/
கல்வியை அடிப்படை உரிமையாக்கும் மசோதா
நவ 07, 2008 12:00 AM
நவ 07, 2008 12:00 AM
6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச ஆரம்பக்கல்வி, கட்டாயக்கல்வி, ஒரே தரத்திலான கல்வி போன்ற அரிய அம்சங்களை வழங்குவதே கல்வி உரிமைச்சட்டத்தின் சாராம்சமாக உள்ளது. இதனை வழங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்த மசோதாவை பல்வேறு நிலைகளில் ஆராய்ந்த அமைச்சர்களின் குழு, இந்த மசோதாவின் எழுத்துப்பூர்வ அறிக்கையை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது. வெகுவிரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், மனிதவள அமைச்சகம் இந்த மசோதாவின் எழுத்துப்பூர்வ அறிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷனின் பார்வைக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றபின்னரே வெளியிடும் நிலை உள்ளது. ஆகஸ்ட் மாதம் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கல்வி உரிமைச்சட்ட மசோதாவில் சில சிறிய திருத்தங்களை அமைச்சர்களின் குழு ஏற்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே இம்மசோதாவில் கொடுக்கப்பட்டிருந்த அம்சங்களில் உள்ள உள்ளூர் அதிகாரமையம், மத்திய அறிவிப்பு போன்ற பிரிவுகளில் மேலும் திருத்தங்கள் தேவையுள்ளதாகவும், அவற்றை மனிதவள அமைச்சகம் சரிசெய்து தரவேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய மத்திய அரசின் காலத்திலேயே இம்மசோதா நிறைவேற்றப்படும் என்று பிரதமரும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இம்மசோதாவில் மாநில நிதி ஒதுக்கீடு தொடர்புடைய அம்சங்களில் பிரச்னை இருப்பதாக சட்ட மற்றும் நிதியமைச்சகம் இரண்டுமுறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆண்டுதோறும் ரூ.55 ஆயிரம் கோடி வரை தேவைப்படும். இவ் வளவு செலவையும் மத்திய அரசே ஏற்க முடியாது என்பதால், இந்த செலவுகளை ஏற்க மாநில அரசுகள் இருக்கவேண்டும் என்று மத்திய அரசின் திட்டக்குழு கூறியுள்ளது. இருந்தாலும், தற்போதுள்ள வரைவை அப்படியே ஏற்க மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் கல்வி உரிமைச்சட்டத்தின் குழு செலவினத்தையும் மாநில அரசுகள் மீது திணிப்பதில் மத்திய அரசின் கருத்தில் மாறுபாடு தோன்றியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வித்தரத்தில் குறைந்தபட்ச தர நிர்ணயங்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கொண்டு வரப்படுகிறது. இவை தவிர இந்தியாவில் தலையாயப் பிரச்னைகளாக உள்ள குழந்தைத் தொழிலாளர் இந்தியாவில் தலையாயப் பிரச்னைகளாக உள்ள குழந்தைத்தொழிலாளர் முறை, குழந்தைகளுக்கு சத்தான ஆகாரம் கிடைத்தால், பாலின வேறுபாடு, ஊனமுற்ற குழந்தைகளுக்கு தனிக்கவனம் போன்றவற்றையும் இம்மசோதா மூலமாக சரிசெய்ய இந்திய அரசு முயற்சி செய்கிறது. ஒரு தனியார் பள்ளியின் மொத்த இடங்களில் 25 சதவீதத்தை ஏழைக்குழந்தைகளுக்கு கட்டாயம் ஒதுக்கவேண்டும் என்ற சர்ச்சைக்குஉரிய அம்சங்களும் இம்மசோதாவில் உள்ளது. ஆனால் இந்த செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொண்டு தனியார் பள்ளிகளுக்கு திரும்பித்தரும் என்ற உத்திரவாதம் உள்ளது.

