நவ 15, 2008 12:00 AM
நவ 15, 2008 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கல்விநிறுவனம் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க தொடங்கியது. இதை சுருக்கமாக நிப்ட் என குறிப்பிடுகின்றனர்.
பேஷன்துறையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் நோக்கிலேயே நிப்ட் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. உலகத்தரத்தில் உடை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பை மேற்கொள்ளக்கூடிய மனித வளத்தை இந்தியாவில் உருவாக்குவதே நிப்ட்டின் குறிக்கோள். இதனால் இந்தியாவில் உடைகள் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்ற நோக்கத்தில் நிப்ட் கல்வி நிறுவனங்கள் அமைக்கப் பட்டன.
டில்லி தவிர மும்பை, கோல்கட்டா, காந்தி நகர், ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ரேபரேலி, பாட்னா ஆகிய இடங்களிலும் நிப்ட் அமைந்துள்ளது. ஷில்லாங், போபால் ஆகிய நகரங்களிலும் அமையவுள்ளது.
அப்பாரல் புரடக்ஷன் - இது நான்கு ஆண்டு இளநிலை படிப்பாகவும், இரண்டு ஆண்டு முதுநிலை படிப்பாகவும் வழங்கப்படுகிறது. கார்மென்ட் மேனுபக்சரின் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி, அப்பாரல் மேனுபக்சரிங் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற பெயர்களில் வழங்கப்பட்ட படிப்பு தற்போது அப்பாரல் புரடக்ஷன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. உடைகள் தயாரிப்புடன் தொடர்புடைய பிரிவு இது. உடை உற்பத்திக்கு பயன்படும் தகவல் தொழில்நுட்ப உத்திகளை பற்றியும் கற்றுத்தருவதே இந்த படிப்பின் சிறப்பு. முன்பு இரண்டு ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பாக மட்டுமே இது வழங்கப்பட்டது. தற்போது இளநிலை படிப்பாகவும் வழங்கப்படுகிறது. ரேபரேலியை தவிர பிற இடங்களில் உள்ள அனைத்து நிப்ட் கல்வி நிறுவனங்களிலும் இந்த படிப்பு உள்ளது.
பேஷன் டிசைன் - நிப்ட் வழங்கும் படிப்புகளில் முக்கியமானதாக பேஷன் டிசைன் கருதப்படுகிறது. இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் உடைவடிவமைப்பில் இந்திய, சர்வதேச பேஷன் பற்றி கற்றுத்தரப்படுகிறது. ரோஹித் பால், ரீது பெரி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பேஷன் வல்லுனர்கள் நிப்டின் பேஷன் டிசைன் மாணவர்கள்.
அக்சசரி டிசைன் - 1991ம் ஆண்டே டில்லியில் உள்ள நிப்ட் கல்வி நிறுவனத்தால் இந்த படிப்பு தொடங்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு இப்போது டில்லி நிப்ட்டில் நிறுத்தப்பட்டாலும், பிற நகரங்களில் உள்ள நிப்ட் கல்வி நிறுவனங்களால் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. இது முன்பு மூன்றாண்டு டிப்ளமோ படிப்பாக வழங்கப் பட்டது. இப்போது நான்காண்டு பட்டப்படிப்பாக வழங்கப்படுகிறது. உடைகள் மட்டுமின்றி தோல்பொருட்கள், காலணிகள் போன்றவை வடிவமைப்பது குறித்தும் இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது.
நிட்வேர் டிசைன் அண்டு டெக்னாலஜி
பின்னல் ஆடை தயாரிப்பது குறித்த இந்த படிப்பு கடந்த 1994ம் ஆண்டு இரண்டு ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது நான்காண்டு இளநிலை பட்டப்படிப்பாக உள்ளது. நிப்டில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பெங்களூரு, போபால், கோல்கட்டா, சண்டிகர், ஆமதாபாத், கவுகாத்தி, ஐதராபாத், லக்னோ, சென்னை , மும்பை, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. எழுத்து வடிவிலான தேர்வில் ஜெனரல் எபிலிட்டி, கிரியேட்டிவ் எபிலிட்டியை சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும்.

