/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஹாஸ்பிடாலிட்டி துறையில் வாய்ப்புகள்!
/
ஹாஸ்பிடாலிட்டி துறையில் வாய்ப்புகள்!
நவ 14, 2008 12:00 AM
நவ 14, 2008 12:00 AM
சுற்றுலா மற்றும் ஓட்டல் நிறுவனங்கள் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை வழங்கிவருகின்றன. எனினும் இந்த துறையில் பணியில் சேர சிறப்பான கல்வியும், பயிற்சியும் அவசியம்.
இது தொடர்பான படிப்புகளை நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வழங்குகின்றன. நேஷனல் கவுன்சில் பார் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி, மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.
ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம் தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை இந்த அமைப்பே முறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலும் ஓட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பான கல்விக்கு அனுமதி வழங்குகிறது.
இந்த துறையில் பல்வேறு படிப்புகள் உள்ளன. ஆர்வத்தின் அடிப்படையில் படிப்பை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
இதில் சில படிப்புகள்:
-டிப்ளமோ இன் பேக்கரி அண்டு கன்பெக்ஷனரி
-டிப்ளமோ இன் ஹவுஸ்கீப்பிங்
-டிப்ளமோ இன் பிரன்ட்ஆபீஸ்
-டிப்ளமோ இன் புட் அண்டு பெவரேஜஸ் சர்வீஸ்
-டிப்ளமோ இன் புட் புரடக்ஷன்
-சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஓட்டல் அண்டு கேட்டரிங் மேனேஜ்மென்ட்
-கிராப்ட்மேன்ஷிப் கோர்ஸ் இன் புட் அண்டு பெவரேஜ் சர்வீஸ்
-கிராப்ட்மேன்ஷிப் கோர்ஸ் இன் புட் புரடக்ஷன்
-போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீஸ்
-போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் ஆகாமடேட் ஆபரேஷன் அண்டு மேனேஜ்மென்ட்
-எம்.எஸ்சி., ஹாஸ்பிடாலிட்டி அட்மினிஸ்டிரேஷன்
போன்ற பல்வேறு படிப்புகள் இதில் உள்ளன.
இந்த துறையில் உள்ள பணிவாய்ப்புகள்:
-மேனேஜ்மென்ட் டிரைனி
-கஸ்டமர் ரிலேஷன்ஸ் எக்சிகியூட்டிவ்
-மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ்
-கிச்சன் மேனேஜ்மென்ட்/ஹவுஸ் கீப்பிங் மேனேஜ்மென்ட் கேட்டரிங் ஆபிசர்
விமான நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சுற்றுலா மேம்பாட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன. சுயமாக தொழில் செய்யவும் முடியும். கேன்டீன், ஓட்டல், ரெஸ்டாரென்ட், காபிபார், டிஸ்கோத்தே என நகர்புறங்களில் உணவு விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வேலைவாயப்புகளும் அதிகரித்துள்ளது. ஹாஸ்பிடாலிட்டி துறையில் நடக்கும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறிந்தும் தொடர்ந்து அறிந்து கொள்வது நல்ல இடத்தில் வேலை கிடைப்பதை உறுதி செய்யும்.
-ஜெயப்பிரகாஷ்காந்தி

