sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

கல்வியில் உலகத்தரம் பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?

/

கல்வியில் உலகத்தரம் பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?

கல்வியில் உலகத்தரம் பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?

கல்வியில் உலகத்தரம் பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?


நவ 14, 2008 12:00 AM

நவ 14, 2008 12:00 AM

Google News

நவ 14, 2008 12:00 AM நவ 14, 2008 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபத்தில் 2008ம் ஆண்டுக்கான ‘வோர்ல்டு யுனிவர்சிடி ரேங்கிங் சர்வே’யை பிரிட்டனைச் சார்ந்த ‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்- என்ற அமைப்பு நடத்தியது. இதில் இந்தியாவைச் சார்ந்த இரண்டு கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன.

2007ம் ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் இந்தியாவின் எந்தக் கல்வி நிறுவனத்தின் பெயரும் இடம் பெறவில்லை. 2008ம் ஆண்டு ஐ.ஐ.டி., டில்லி 154 வது இடத்திலும், ஐ.ஐ.டி., பாம்பே 174வது இடத்தையும் பெற்றுள்ளது. இத்தகவலை ‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதனைக்கருத்தில் கொண்ட பிரிட்டிஷ் உயர்கல்வி அறிஞர்கள், கல்வித்துறையில் தரமான பணியாளர்களை சேர்ப்பதையும், ஆராய்ச்சித்துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய அவசியத்தையும் இந்தியா உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

உலகளவில் இந்தியா கல்வித்துறையில் பின்தங்கியுள்ளது என்றும் நல்ல தரம் வாய்ந்த கல்விப்பணியில் ஆசிரியர்களைச் சேர்ப்பதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்றும் இந்த அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் தரமும் போதுமான அளவில் இல்லை என்றும், படிப்பையும், ஆராய்ச்சியையும் தனித்தனி கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளும் பழங்கால முறை மாறவேண்டும் என்றும் பிரிட்டிஷ் உயர்கல்வியாளர்கள் கருதுகின்றனர். உலகளவில் முக்கியத்துவம் பெறும் முயற்சியில் இந்தியா பின்தங்கிய விழிப்புணர்வுடன் உள்ளதாகவும், சீனா இதே காலத்தில் பெரிதும் வளர்ச்சி கண்டு வருவாதகவும் இவர்கள் கூறுகின்றனர்.

இதற்கு இந்தியாவில் நிலவும் அரசியல் சூழலும், கொள்கைரீதியான முடிவுகளுமே காரணமாகும் என்று இவர்கள் கூறுகிறார்கள். சீனாவின் பல்கலைக்கழகங்கள் 50 மற்றும் 56 வது இடத்தைப் பெற்றுள்ளன. ஹாங் காங் மற்றும் சியோல் பல்கலைக்கழகங்கள் முதல் 200 இடங்களுக்குள் இந்த ஆண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us