/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
அடுத்த நிதியாண்டின் வேலை வாய்ப்புகள் எதில்?
/
அடுத்த நிதியாண்டின் வேலை வாய்ப்புகள் எதில்?
டிச 20, 2008 12:00 AM
டிச 20, 2008 12:00 AM
எனினும் இந்த நிதியாண்டின் அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் புதிய வேலைகளுக்கான சூழல் ஆரோக்கியமாக இருப்பதாகவே துறையின்
நிபுணர்கள் கருதுகிறார்கள். புதிய வேலைகளை உருவாக்கலாம் என்ற எண்ணம் இந்தியாவில் அதிகம் இருப்பதாக சமீபத்திய கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதை மேன்பவர் எம்ப்ளாய்மெண்ட் அவுட்லுக் சர்வே தெரிவிக்கிறது.
புதிய வேலைகளை தங்களால் உருவாக்க முடியும் என உலக அளவில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பது பெரு நாட்டு நிறுவனங்கள் தான். இந்த அட்டவணையில் 2வது இடத்தில் இருக்கின்றன இந்திய நிறுவனங்கள். பெரு நாட்டின் 24 சதவீத நிறுவனங்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளன. இந்திய நிறுவனங்களில் 19 சதவீத நிறுவனங்கள் இது போன்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளன.
இந்தியாவைத் தொடர்ந்து இந்த அட்டவணையில் வருவது கோஸ்டாரிகா, கனடா, ருமேனியா, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து மற்றும் அமெரிக்கா, சீனா நாடுகள். புதிய வேலைகள் குறித்த நடவடிக்கைகள் மிகக் குறைவாகக் காணப்படும் நாடுகளாக சிங்கப்பூரும் தைவானும் இடம் பெறுகின்றன.
ருமேனியா, தென்னாப்பிரிக்கா, போலந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் புதிய வேலைகள் குறித்த நம்பிக்கையைக் கொண்டுள்ளன. அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றில் இந்த நம்பிக்கை மிகக் குறைவாக உள்ளது. 2009ம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிய வேலைகள் அதிகரிக்கும் என இந்திய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
எனினும் கடந்த ஆண்டை விடவும் கடந்த காலாண்டை விடவும் புதிய வேலைகள் குறையும் என்றே பொதுவாக இந்திய நிறுவனங்கள் கருதுகின்றன. கிழக்கிந்திய பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் புதிய வேலைகளுக்கான வாய்ப்புகளை 20 சதவீத அளவுக்குப் பெற்றிருக்கின்றன. இதில் தெற்குப் பகுதியில் 19 சதவீதமும், மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் 18 சதவீதமும் வாய்ப்புகள் புதிதாக உருவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் துறை வாரியாக வாய்ப்புகள் எப்படி?
நிதி, இன்சூரன்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட்: 2009ம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிய வேலை வாய்ப்புகளில் நிறைய வாய்ப்புகள் இந்தத் துறையில் எழும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் 17 சதவீதம் என மதிப்பிடப்படுகிறது. கடந்த காலாண்டில் அதற்கு முந்தைய காலாண்டை விட இத் துறையில் புதிய வாய்ப்புகள் வீழ்ச்சியடைந்த போதும் அடுத்த நிதியாண்டின் புதிய காலாண்டில் இது எழுச்சி பெறும் என கணிக்கிறார்கள் துறை நிபுணர்கள்.
உற்பத்தி: இத் துறை நிதானமாக 18 சதவீத புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
சேவை: 2009ம் ஆண்டின் புதிய காலாண்டில் இத்துறைக்குத் தேவைப்படும்
மனித வளம் 23 சதவீதமாக உருவாகும் என கணிக்கப்படுகிறது. எனவே அடுத்த நிதியாண்டின் அதிக வாய்ப்புகள் இத் துறையில் தான் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது நிர்வாகம் மற்றும் கல்வி: இத்துறையின் வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.
ஹோல்சேல் மற்றும் ரீடெயில் விற்பனை: இத் துறையின் வளர்ச்சி மந்தமாக இருக்கும் என்பதால் 11 சதவீத புதிய வேலைகளைத் தான் இத் துறையால் தர முடியும் என வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
சுரங்கம்: இத் துறையில் புதிய வாய்ப்புகள் 23 சதவீதமாக இருக்கும் என துறையினர் எதிர்பார்க்கிறார்கள்.
போக்குவரத்து மற்றும் பொதுப் பயன்பாட்டுத் துறை: இத் துறையின் வளர்ச்சி பற்றி சந்தேகங்கள் அதிகமாக இருக்கின்றன. புதிய வாய்ப்புகள் 12 சதவீதமாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றி நிஜமான கவலைகளோடும்
அக்கறையோடும் படிக்கும் எண்ணற்ற மாணவர்கள் தங்களது தகுதியைத் தவிர திறன்களை வளர்த்துக் கொள்வதில் தான் அவர்களுக்கான எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதால் இக் கட்டுரையில் தரப்பட்டுள்ள துறை வாரியான வாய்ப்புகளை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.