sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

கல்வியுடன் சமூக பணி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (36)

/

கல்வியுடன் சமூக பணி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (36)

கல்வியுடன் சமூக பணி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (36)

கல்வியுடன் சமூக பணி - சிறந்த கல்வி நிறுவனங்கள் (36)


டிச 20, 2008 12:00 AM

டிச 20, 2008 12:00 AM

Google News

டிச 20, 2008 12:00 AM டிச 20, 2008 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட சமூக பணிக்கான பிரத்யேக கல்வி மையம் ‘டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் ஸ்டடீஸ்’. சுருக்கமாக ‘டிஸ்’ என கூறப்படும் இந்த கல்விமையம் மும்பையின் செம்பூர் பகுதியில் அமைந்துள்ளது.

1936ம் ஆண்டு சர் ‘தொராப்ஜி டாடா கிராஜுவேட் ஸ்கூல் ஆப் சோஷியல் ஸ்டடீஸ்’ என்ற பெயரில் இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் சமூக பணி கல்வியையும், சமூக ஆய்வையும் மேம்படுத்தவும், தலைமையேற்கும் தகுதியுடன் கூடிய மாணவர்களை உருவாக்குவதையும் இலக்காக கொண்டு ‘டிஸ்’ செயல்படுகிறது.

இங்கு 5 துறைகள் உள்ளன.
- ஹெல்த் சிஸ்டம்ஸ் ஸ்டடீஸ்
- மேனேஜ்மென்ட் அண்டு லேபர் ஸ்டடீஸ்
- ரூரல் டெவலப்மென்ட்
- சோஷியல் சயின்சஸ்
- சோஷியல் ஸ்டடீஸ்

இங்குள்ள சிறப்பு மையங்கள்
- டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
- லைப்லாங் லேர்னிங்
- மீடியா அண்டு கல்சுரல் ஸ்டடீஸ்
- டிப்ளமோ இன் சஸ்டைனபில் டெலவப்மென்ட்

இளநிலை படிப்பு
- பி.ஏ., (ஹானர்ஸ்) சோஷியல் ஒர்க்

முதுநிலை படிப்புகள்
- எம்.ஏ., டெவலப்மென்ட் ஸ்டடீஸ்
- எம்.ஏ., டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
- எம்.ஏ., எஜுகேஷன்
- எம்.ஏ., குளோபலைசேஷன் அண்டு லேபர்
- எம்.ஏ., பப்ளிக் ஹெல்த்
- எம்.ஏ., ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட் அண்டு பப்ளிக் ஹெல்த்
- எம்.ஏ., மீடியா அண்டு கல்சுரல் ஸ்டடீஸ்
- எம்.ஏ., சோஷியல் ஒர்க்
- மாஸ்டர் ஆப் சோஷியல் ஆந்த்ரபிரானர்ஷிப்
- மாஸ்டர் ஆப் ஹெல்த் அட்மினிஸ்டிரேஷன்
- மாஸ்டர் ஆப் ஹாஸ்பிடல் அட்மினிஸ்டிரேஷன்

எம்.பில்., படிப்புகள்
- ஹெல்த் சிஸ்டம் ஸ்டடீஸ்
- மேனேஜ்மென்ட் அண்டு லேபர் ஸ்டடீஸ்
- சோஷியல் சயின்சஸ்
- சோஷியல் ஒர்க்

சர்டிபிகேட் படிப்புகள்
- சர்டிபிகேட் இன் சோஷியல் ஒர்க்
- சர்டிபிகேட் இன் ரிஹேபிலிடேஷன் கவுன்சிலிங்
- அட்வான்ஸ்டு சர்டிபிகேட் இன் சோஷியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன்
- போஸ்ட் கிராஜுவேட் சர்டிபிகேட் இன் சோஷியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன்

டிப்ளமோ படிப்புகள்
- டிப்ளமோ இன் ஹாஸ்பிடல் அட்மினிஸ்டிரேஷன்
- டிப்ளமோ இன் பெர்சனல் மேனேஜ்மென்ட்
- டிப்ளமோ இன் சஸ்டைனபிள் டெவலப்மென்ட்


முன்பு பெர்சனல் மேனேஜ்மென்ட் அண்டு இண்டஸ்டிரியல் ரிலேஷன்ஸ் என்ற பெயரில் வழங்கப்பட்ட படிப்பு தான் தற்போது எம்.ஏ., ஹியூமன் ரிசோர்ஸ் மேஜேன்மென்ட் அண்டு லேபர் ரிசோர்சசாக வழங்குகின்றனர். தற்போது புதிதாக எம்.ஏ., டெவலப்மென்ட் ஸ்டடீஸ் மற்றும் எலிமென்ட்ரி எஜுகேஷன் ஆகிய படிப்புகளையும் வழங்குகின்றனர்.

‘தி இந்தியன் ஜர்னல் ஆப் சோஷியல் ஒர்க்’, எனப்படும் சமூக பணிகள் குறித்த பத்திரிகையை 1940ம் ஆண்டில் இருந்து ‘டிஸ்’ வெளியிட்டு வருகிறது. இந்த துறை சார்பாக தெற்காசியாவில் தொடங்கப்பட்ட முதல்பத்திரிகை இது. சுதந்திரத்துக்கு பின்னர் நடந்த பிரிவினையின் போது பாதிக்கப்பட்ட அகதிகளுக்காகவும் ‘டிஸ்’ சார்பில் நிவாரண முகாம்கள் நடத்தப்பட்டன. சுனாமி பாதிப்பின் போது தமிழகத்திலும் ஏறத்தாழ 250 கிராமங்களுக்கு மேல் சென்று ‘டிஸ்’ மாணவர்கள் நிவாரண உதவிகளை வழங்கினர்.

இலங்கைக்கு ‘டிஸ்’ குழு சென்று ஏறத்தாழ 3 மாதங்கள் வரை தங்கியிருந்து சுனாமி பாதித்த பகுதிகளில் வசித்த மக்களுக்கு உதவியது. இன்றும் வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும் இடங்களுக்கு ‘டிஸ்’ சார்பில் மாணவர்கள் அடங்கிய குழுக்களை நிவாரண உதவிக்கு அனுப்புகின்றனர்.






      Dinamalar
      Follow us