sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

எங்கே செல்கிறது இந்தியக் கல்வி?

/

எங்கே செல்கிறது இந்தியக் கல்வி?

எங்கே செல்கிறது இந்தியக் கல்வி?

எங்கே செல்கிறது இந்தியக் கல்வி?


டிச 27, 2008 12:00 AM

டிச 27, 2008 12:00 AM

Google News

டிச 27, 2008 12:00 AM டிச 27, 2008 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த ஆய்வின் அம்சங்கள் நமது சிந்தனையை துõண்டுவதாக அமைந்துள்ளது.

*வளர்ச்சி பெற்று வரும் உலகின் தலையாய 7 நாடுகளில் இந்தியாவின் கல்வித் தர மேம்பாடு 6வது இடத்தில் உள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது ரஷ்யா தான்.

*கல்வித் துறை அமைப்பின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலையில் தான் இந்தியா இன்னும் இருக்கிறது. இதே நிலையில் இந்திய கல்வி முறை தொடரும் பட்சத்தில் கல்வி மேம்பாட்டுக்கான நெடுங்காலத் திட்ட செயல்பாட்டில் இந்தியா பின்தங்கி விடும். பிற நாடுகளிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்தும் வெற்றிக்கான காரணிகளை இழந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

*முதலிடத்திலுள்ள ரஷ்யா 7.3 புள்ளிகளையும் 2ம் இடத்திலுள்ள சீனா 6.7 புள்ளிகளையும் பெற்ற நிலையில் 6ம் நிலையிலுள்ள இந்தியா வெறும் 3.3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

*தென் அமெரிக்க நாடான பிரேசில் 5.56 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்திலிருப்பதுடன் ஆய்வுக்குரிய அனைத்து சாதகமான காரணிகளிலும் நிலைத் தன்மையைப் பெற்றுள்ளது.

*சிறப்பான உயர் கல்வி அமைப்பைக் கொண்டிருப்பதன் காரணமாக மெக்சிகோ 4வது இடத்திலுள்ளது.

*வளரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் சமீபத்தில் இடம் பெற்ற தென்னாப்ரிக்கா நாடானது 5வது இடத்திலுள்ளது. எனினும் இந்த நாட்டின் ஆரம்பக் கல்வி முறையானது குறைந்த தரத்திலேயே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

*இந்தப் பட்டியலில் கடைசியாக இடம் பெற்றுள்ள இந்தோனேசியா இந்தியாவுக்கு அடுத்ததாக 2.68 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

*இந்தியாவின் மொத்த கல்வி முறையில் ஆரம்பக் கல்வி முறை தான் மிகவும் பின் தங்கியுள்ளது. கட்டாய ஆரம்பக் கல்வி நடைமுறையில் இருந்தாலும் மொத்த பதிவு விகிதமானது 98.1 ஆக உள்ளது.

*ஆரம்பக் கல்வியில் இந்தியாவில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் தான் மிக அதிகமானதாக இருக்கிறது.

*உயர் நிலைப் பள்ளிப் படிப்புகளில் இந்தியா கடைசி இடத்தையே பிடித்துள்ளது. இப் பிரிவில் ரஷ்யாவும் பிரேசிலும் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றன. இந்தியாவில் 32 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் சீனாவிலும் பிரேசிலிலும் இது 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவிலேயே உள்ளது.

*ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி வரை தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

*கல்லூரிப் படிப்புகளில் இணைபவர்களின் மொத்தப் பதிவு விகிதம் 11 சதவீதம் தான் என்பது கவலை தரும் செய்தி.

*மொத்தம் படிப்பவர்களுக்கும் மாணவியருக்குமான விகிதம் இந்த 7 நாடுகள் தவிர்த்து ஒட்டுமொத்த வளரும் நாடுகள் அனைத்திலும் மிகக் குறைவாகவே இருப்பதும் கவலை தரும் புள்ளிவிபரமாகும். இந்தியாவில் 8.1 சதவீதமாக இது இருக்கிறது. ரஷ்யாவில் இது 56.7 சதவீதம் என்பதிலிருந்து நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என அறியலாம்.

*உயர் கல்வி மட்டும் இந்தியாவில் ஆறுதல் தரும் விதத்தில் 3வது இடத்தில் உள்ளது.

*உலகின் தலை சிறந்த 100 மேனேஜ்மென்ட் பள்ளிகளில் ஒன்று இந்தியாவிலிருந்தாலும் உலகின் தலை சிறந்த 200 பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட இந்தியாவில் இல்லை என்று அசோசாம் கூறுகிறது.

*பாலின பாகுபாட்டில் இந்தியா உலகில் 116வது இடத்தில் இருப்பது மட்டும் சற்றே ஆறுதலான செய்தியாகும்.






      Dinamalar
      Follow us