/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பேராசிரியர்களும் படிக்க ஐதராபாத் பல்கலை- சிறந்த கல்வி நிறுவனம் (38)
/
பேராசிரியர்களும் படிக்க ஐதராபாத் பல்கலை- சிறந்த கல்வி நிறுவனம் (38)
பேராசிரியர்களும் படிக்க ஐதராபாத் பல்கலை- சிறந்த கல்வி நிறுவனம் (38)
பேராசிரியர்களும் படிக்க ஐதராபாத் பல்கலை- சிறந்த கல்வி நிறுவனம் (38)
ஜன 04, 2009 12:00 AM
ஜன 04, 2009 12:00 AM
முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான பிரத்யேக கல்வி நிறுவனமாக 1974ல் ஐதராபாத் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
இது ஒரு மத்திய பல்கலைக்கழகம். இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த இங்கு யு.ஜி.சி.,யால் நடத்தப்படும் சிறப்பு பிரிவு செயல்படுகிறது. பேராசிரியர்களுக்கு இங்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்
- மேதமெடிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர்
- இயற்பியல்
- வேதியியல்
- லைப் சயின்சஸ்
- ஹியுமானிட்டீஸ்
- சமூக அறிவியல்
- பெர்பாமிங் ஆர்ட்ஸ், பைன் ஆர்ட்ஸ், கம்யூனிகேஷன்
- மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்
மேதமெடிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் பிரிவின் கீழ்
- மேதமெடிக்ஸ் அண்டு ஸ்டாடிஸ்டிக்ஸ்
- கம்ப்யூட்டர் அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ் ஆகிய துறைகள் செயல்படுகின்றன.
ஹியுமானிட்டீஸ் பிரிவின் கீழ்
- ஆங்கிலம்
- பிலாசபி
- இந்தி
- தெலுங்கு
- உருது
- சமஸ்கிருதம்
- அப்ளைடு லிங்குவிஸ்டிக்ஸ் அண்டு டிரான்ஸ்லேஷன் ஸ்டடீஸ்
- கம்பாரிட்டிவ் லிட்ரேச்சர்
- சோஷியல் எக்ஸ்குளுஷன் அண்டு இன்குளுசிவ் பாலிசி ஆகியவை செயல்படுகின்றன.
இங்குள்ள சிறப்பு மையங்கள்
- சென்டர் பார் காக்னிட்டிவ் சயின்ஸ்
- யுனிவர்சிட்டி சென்டர் பார் எர்த் அண்டு ஸ்பேஸ் சயின்சஸ்
- அட்வான்ஸ்டு சென்டர் பார் ரிசர்ச் இன் ஹைஎனர்ஜி மெட்டீரியல்
- சென்டர் பார் மாடலிங் சிமுலேஷன் அண்டு டிசைன்
- சென்டர் பார் ஹெல்த் சைக்காலஜி
- ஸ்பெஷல் சென்டர் பார் இன்டகிரேடட் ஸ்டடீஸ்
புதிதாக அமையவுள்ள மையங்கள்
- சென்டர் பார் நாலட்ஜ் கல்ச்சர் அண்டு இனோவேஷன் ஸ்டடீஸ்
- சென்டர் பார் என்டேஞ்சர்டு லாங்குவேஜ் அண்டு மதர் டங் ஸ்டடீஸ்
- சென்டர் பார் புத்திஸ்ட் ஸ்டடீஸ்
- சென்டர் பார் ரிசர்ச் அண்டு எஜுகேஷன் இன் ஏஜிங்
- இன்டர்யுனிவர்சிட்டி சென்டர் பார் கம்பாரிட்டிவ் ஸ்டடி ஆப் இந்தியன் லாங்குவேஜஸ் அண்டு லிட்ரேச்சர்
- சென்டர் பார் த ஸ்டடி ஆப் கிரேட் இந்தியன் திங்கர்ஸ் ஆப் அவர் டைம்ஸ்
- சென்டர் பார் பாரின் லாங்குவேஜஸ்
- சென்டர் பார் டிரான்ஸ்லேஷன் அண்டு ஸ்டடி ஆப் தலித் அண்டு டிரைபல் லிட்ரேச்சர்
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்
எம்.எஸ்சி., படிப்புகள்:
- கணிதம்
- அப்ளைடு மேதமெடிக்ஸ்
- ஸ்டாடிஸ்டிக்ஸ்
- இயற்பியல்
- வேதியியல்
- பயோகெமிஸ்ட்ரி
- தாவர அறிவியல்
- அனிமல் பயோடெக்னாலஜி
- பயோடெக்னாலஜி
எம்.ஏ., படிப்புகள்:
- ஆங்கிலம்
- பிலாசபி
- இந்தி
- பங்ஷனல் இந்தி
- தெலுங்கு
- உருது
- பொருளாதாரம்
- வரலாறு
- பொலிட்டிக்கல் சயின்ஸ்
- சோஷியாலஜி
- ஆந்ரபாலஜி
- அப்ளைடு லிங்குவிஸ்டிக்ஸ்
- கம்யூனிகேஷன்
எம்.பி.ஏ., (M.P.A.,) படிப்புகள்:
- டான்ஸ்
- தியேட்டர் ஆர்ட்ஸ்
- டான்ஸ்
- தியேட்டர் ஆர்ட்ஸ்
- பெயின்டிங்
- பிரின்ட் மேக்கிங்
- சிற்பக்கலை
இது தவிர எம்.பி.ஏ., மற்றும் எம்.சி., படிப்புகளும் உள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டிலும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இந்த பல்கலைக்கழகத்தில் 13 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் 8 மாணவர்களுக்கு, 5 மாணவிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் ஒரு வணிக வளாகமும், 24 மணி நேரமும் செயல்படும் ஒரு மருத்துவமனையும் இங்கு செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 15 சதவீதம் வரை வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முறையாக மாணவர் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் சேர முடியும்.