தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இண்டஸ்டிரியல் ஏரியா பிளானிங்

இண்டஸ்டிரியல் ஏரியா பிளானிங்

இண்டஸ்டிரியல் ஏரியா பிளானிங்


செப் 19, 2009 12:00 AM

செப் 19, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 19, 2009 12:00 AM செப் 19, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்வளர்ச்சி முக்கியமானது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சிறப்பு முதலீட்டு மண்டலங்கள், தொழில் நகரங்களை அமைத்து தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த மத்திய அரசும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள நிர்வாகம் மற்றும் திட்டமிடல் பிரிவில் நிபுணர்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என தெரிகிறது. குஜராத்தில் உள்ள சென்டர் பார் என்விரான் மென்டல் பிளானிங் அண்டு டெக்னாலஜி பல்கலைக்கழகமும், குஜராத் இண்டஸ்டிரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனும் இணைந்து, இண்டஸ்டிரியல் ஏரியா பிளானிங் அண்டு மேனேஜ் மென்ட்டில் எம்.டெக்., படிப்பை வழங்குகிறது.

இந்த படிப்பில் தொழில் துறையில் திட்டமிடல், நிர்வாகம், வடிவமைப்பு, முன்னேற்றம் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த துறையில் திறன்வாய்ந்த நிபுணர்களுக்கான தேவையை நிறைவு செய்யும் வகையிலும், வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ளும் பயற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்கும் நோக்கிலும் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்க்கிடெக்சர், சிவில் இன்ஜினியரிங், பிளானிங் பிரிவில் இளநிலை பட்டமோ, சோஷியாலஜி, பொருளாதாரம், புவியியல் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டமோ நிறைவு செய்திருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு அரசுத்துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில்துறை திட்டமிடலுடன் தொடர்புடைய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.  தொடக்க சம்பளமாக ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் முதல் 12 லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு www.cept.ac.in

என்ற வெப்சைட்டை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us