தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கல்வித் துறையின் 6 சீர்திருத்தங்கள்

கல்வித் துறையின் 6 சீர்திருத்தங்கள்

கல்வித் துறையின் 6 சீர்திருத்தங்கள்


செப் 19, 2009 12:00 AM

செப் 19, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 19, 2009 12:00 AM செப் 19, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இவற்றுக்கு மாற்றாக ஒரு குழுவை அமைப்பது உள்ளிட்ட 6 கல்வி சீர்திருத்த மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. உயர் கல்வித் துறையில் தன்னாட்சி கொண்ட அதிகார அமைப்பு ஒன்றை நிறுவும் மசோதாவை அடுத்த பார்லிமெண்ட் தொடரில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதற்காக வரைவு தயார் செய்யப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தேசிய அறிவுக் கழகம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

கல்விக்கான மதிய அறிவுரை தரும் வாரியம் உயர் கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசியக் கழகம் என்பதாக அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளைத் தந்திட திறனாளர்களின் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கல்வி தொடர்பான தவறான நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது போன்ற விஷயங்களில் சட்டபூர்வமான அம்சங்கள் அலசப்பட்ட வருகின்றன. ஏற்கனவே உள்ள காப்பிரைட் சட்டத்தைத் திருத்துவது மற்றும் உயர் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்ட தகராறுகளை பரிசீலிப்பதற்கான ஆணையத்தை நிறுவுவது குறித்து 2 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும்.

உலகளாவிய அளவில் திறன் பெற்ற ஆசிரியர்களை வைத்து நம் நாட்டில் கல்வி நிறுவனங்களில் பாடம் நடத்த வகை செய்யும் முயற்சிகளும் யோசிக்கப்பட்டு வருகின்றன. தரமான ஆசிரியர்களுக்கு கல்வி நிறுவனங்களில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மனித வள அமைச்சகத்தின் சார்பில் கூறப்படுகிறது.

முஸ்லிம் மாணவர்களின் இறையியல் படிப்புகளைத் தடை செய்யாமல் அதே நேரம் பிற படிப்புகளையும் வழங்கிட மத்திய மதரஸா வாரியம் அமைத்து அதன் மூலமாக அவர்களுக்கு வேலைச் சந்தையில் அவர்களது மதிப்பைக் கூட்டிடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் 100 புதிய மகளிர் விடுதிகள் நிறுவப்பட்டுவிட்டதாகவும் மேலும் 150 மகளிர் விடுதிகளை உயர்கல்வி நிறுவனங்களில் நிறுவவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகளுக்காக இதுவரை 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப் பட்டுள்ளது. தேசிய அளவிலான பாடப்புல வலையமைப்பு மற்றும் ஆசிரியர்களின் கல்விக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வெகு விரைவில் தயாராகி விடும்.

சி.பி.எஸ்.இ.,யில் 10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம், 6.5 கோடி ரூபாய் பெண்களுக்கான கல்வி இயக்கம் என்பது போன்ற முயற்சிகளும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன.

வரும் கல்வியாண்டு முதல் கல்வி அடிப்படை உரிமையாகிவிடும் சாத்தியங்களும் தற்போது அதிகமாக உள்ளன. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் வாயிலாக நாட்டில் 19 கோடி மாணவர்களை கல்வி எட்டியிருப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இதற்காக 4 ஆயிரத்து 919 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us