செப் 19, 2009 12:00 AM
செப் 19, 2009 12:00 AM
அ நிறம் | அளவு
குறிப்பாக வயதானவர்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்திய திறனாளர்களுக்குக் கடுமையான கிராக்கி இருக்கிறது. எனினும் பொருளாதார மந்த நிலையால் இதில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது ஒரு கேள்வியாக விவாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது உள்ளது. வேலையில்லா விகிதம் எப்போதுமில்லாத அளவாக 9 சதவீதமாக உள்ளது. அமெரிக்க நிதி நிறுவனங்களில் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது. இவற்றில் தான் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் பணி புரிகின்றனர். பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசின் நிதியுதவித் திட்டம் ஒன்றின் மூலமாக உதவி தரப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனங்களில் எந்த அமெரிக்கருக்கும் வேலை மறுக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டபின் தான் இந்த நிதியுதவி தரப்படுகிறது. இந்த காரணத்தினால் உலகெங்கும் விரும்பப்படும் எச்1பி அமெரிக்க விசாக்கள் 20 ஆயிரத்துக்கும் மேலாக யாராலும் பெறப்படாமலே உள்ளன.பொருளாதாரத் தேக்கநிலையால் உலகின் பல பகுதிகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகவில்லை என்றாலும் இந்தியத் திறனாளர்கள் மட்டும் பொதுவாக எங்குமே வரவேற்கப்படுவதாக வேலை ஆலோசகர்கள் மதிப்
பிடுகின்றனர். தற்போதைய பொருளாதார நிலையால் உலகின் பல பகுதி
களில் பணி புரியும் இந்தியத் திறனாளர்கள் மட்டும் பணியாளர்களின் நிலை குறித்த ஆய்வு ஒன்றை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சகம் சமீபத்தில் நடத்தியது. அந்த ஆய்வின் படி, புதிய வேலைகள் உருவாகும் போது, உலகெங்கும் இந்தியத் திறனாளர்கள் வரவேற்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலையை எட்டிய 2008ம் ஆண்டில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியத் தொழிலாளர்கள் ரூ.2250 கோடியை இந்தியாவுக்கு ஈட்டிய சம்பளம் மற்றும் வருமானமாக அனுப்பியுள்ளனர். இந்த ஆண்டும் இதில் அதிகரிப்பு காணப்படும் என்று தற்போது
மதிப்பிடப்படுகிறது. இந்தியாவுக்கு இவர்கள் அனுப்பும் பணமானது சேமிப்பாக மட்டுமல்லாது முதலீடாகவும் அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இந்தியர்கள் விரும்பி அதிக எண்ணிக்கையில் செல்லும் துபாயில் பொருளாதார இறுக்கச் சூழல் காணப்பட்டாலும் இப்போது நமது தொழிலாளர்கள் அதிகமாகச் செல்வது சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளுக்குத் தான். 2007-08ல் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக இருந்தது. இது 2008-09ல் 8.75 லட்சமாக அதிகரித்துள்ளது. இது போலவே வெளிநாடுகளிலிருந்து
தாயகம் திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனின் புளூ-கார்ட் முறைப்படி திறனாளர்கள் பெருமளவில் வரவேற்கப்படுகின்றனர். இந்த புதிய முறைப்படி நிரந்தர குடியேற்ற உரிமம் பெறுவது திறனாளர்களுக்கு ஒரு பெரிய செயல் அல்ல.
ஸ்வீடன் உழைப்பாளர் குடியேற்ற உதவித் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன் நோக்கம் திறம் படைத்த இந்தியரை ஊக்கப்படுத்திடத்தான். இது போலவே டென்மார்க் தனது உதவி மையம் ஒன்றை புதுடில்லியில் சமீபத்தில் துவங்கியுள்ளது. திறனாளர்களுக்கான சிறப்பு உரிமம் ஒன்றை பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது. 3 ஆண்டு காலத்திற்குத் தரப்படும் இந்த உரிமமானது மேலும் எளிதாக நீடிக்கப்படலாம்.
ஐ.டி., துறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல காத்திருப்போர், தற்போது உலகில் பல நாடுகளில் இந்தியருக்குக் காத்திருக்கும்
தேவையால் பலனடையவுள்ளனர். ருமேனியா, பிரிட்டன் மற்றும்
அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஐ.டி., திறன் கொண்ட இந்தியருக்கு வரும் மாதங்களில் சிறப்பான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
